Senthamil.Org

சோலைமிக்க

தேவாரம்

சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் 
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான் 
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன 
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.
சோலைமிக்க எனத்தொடங்கும் தேவாரம்