சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும் வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.