சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து புஜசி ஓதிவா யுலகம் ஏத்த உகந்துதாம் அருள்கள் செய்வார் ஆதியாய் அந்த மானார் யாவரும் இறைஞ்சி யேத்த நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.