Senthamil.Org

சொல்லிற்

தேவாரம்

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் 
 தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன் 
கல்லில் வலிய மனத்தேன் 
 கற்ற பெரும்புல வாணர் 
அல்லல் பெரிதும் அறுப்பான் 
 அருமறை ஆறங்கம் ஓதும் 
எல்லை இருப்பதும் ஆரூர்அவர் 
 எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொல்லிற் எனத்தொடங்கும் தேவாரம்