சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத் தொன்னரக நன்னெறியாற் று{ர்ப்பான் றன்னை வில்லானை மீயச்சூர் மேவி னானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப் பொறியரவம் மார்பாரப் புஜண்டான் றன்னைக் கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.சொல்லார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்