சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை அல்லானைப் பகலானை அரியான் றன்னை அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும் நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.சொல்லானைப் எனத்தொடங்கும் தேவாரம்