சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார் அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர் மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.