Senthamil.Org

சேற்றினார்

தேவாரம்

சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதியாரே.
சேற்றினார் எனத்தொடங்கும் தேவாரம்