சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.