Senthamil.Org

சேந்தாய

தேவாரம்

சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும் 
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக் 
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள் 
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி 
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி 
மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி 
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
சேந்தாய எனத்தொடங்கும் தேவாரம்