செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.