Senthamil.Org

செற்றுக்

தேவாரம்

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற 
ஞான்று செருவெண்கொம்பொன் 
றிற்றுக் கிடந்தது போலும் 
இளம்பிறை பாம்பதனைச் 
சுற்றிக் கிடந்தது கிம்புரி 
போலச் சுடரிமைக்கும் 
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா 
லொற்றி யூரனுக்கே.
செற்றுக் எனத்தொடங்கும் தேவாரம்