Senthamil.Org

செற்றான்காண்

தேவாரம்

செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப் பட்ட 
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
செற்றான்காண் எனத்தொடங்கும் தேவாரம்