Senthamil.Org

செறுவினிற்செழுங்

தேவாரம்

செறுவினிற்செழுங் கமலமோங்குதென் 
புகலூர்மேவிய செல்வனை 
நறவம்புஜம்பொழில் நாவலூரன் 
வனப்பகையப்பன் சடையன்றன் 
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய 
பாடல்பத்திவை வல்லவர் 
அறவனாரடி சென்றுசேர்வதற் 
கியாதுமையுற வில்லையே. 
 
இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி 
செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப் 
புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில் 
திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி 
அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி 
யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு 
மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.
செறுவினிற்செழுங் எனத்தொடங்கும் தேவாரம்