Senthamil.Org

செறிவுண்

தேவாரம்

செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்
 தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் 
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் 
 வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல் 
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப் 
 பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை 
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே 
 ஆரூ ரானை மறக்கலு மாமே.
செறிவுண் எனத்தொடங்கும் தேவாரம்