செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன் குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன் நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன் அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையு ளானே.