செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறிகமழ் சடைமுடி யீரே வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந் நெறியுணர் வோருயர்ந் தோரே.