செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித் தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும் நெறிகொண்ட குழலியுமை பாக மாக நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும் மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும் மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக் குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.செறிகொண்ட எனத்தொடங்கும் தேவாரம்