செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லத்தா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே.