Senthamil.Org

செய்யார்

தேவாரம்

செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன் 
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற் 
பொய்யாத் தமிழுரன் உரைத்தன வல்லார் 
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே 
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே 
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற 
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
செய்யார் எனத்தொடங்கும் தேவாரம்