செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில ரென்றும்ஏத்தி நினைந்திட ஐயன்ஆண்டகை அந்தணன்அரு மாமறைப்பொரு ளாயினான் பெய்யும்மாமழை யானவன்பிர மாபுரம்இடம் பேணிய வெய்யவெண்மழு வேந்தியைநினைந் தேத்துமின்வினை வீடவே.