செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான் அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்துங் காணான் நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளி நாளும் நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.