செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச் செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக் கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும் நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.செம்பொன்னை எனத்தொடங்கும் தேவாரம்