செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான் கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்று{ர் மேய நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.