செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன் ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி எப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.