செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய் அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.