சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.