செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமொடு அன்னமாகி அந்தமடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோ ன் அமருங்கோயில் புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலையாமே.