செந்தண்புஜம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட அந்தண்புஜங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ் சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.