செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே.