செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.