செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளன்மின் கடிய வன்னுறை கின்ற கரவீரத் தடிய வர்க்கில்லை யல்லலே.