செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந் திருவால வாயுறையுஞ் செல்வ னாரும் அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும் ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும் மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும் வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.செஞ்சடைக்கோர் எனத்தொடங்கும் தேவாரம்