செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி நஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும் மஞ்சடைச் சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே துஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.