செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடு பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்த் திங்கள்சூடிய செல்வனாரடி யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி லங்கிருந் துறைவார் அவரே அழகியரே.