சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப் போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன் தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால் ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.