சூழுந் துயர மறுப்பார் போலுந் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும் ஆட லுகந்த அழகர் போலுந் தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு தன்மை யளித்த தலைவர் போலும் ஏழு பிறப்பு மறுப்பார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.சூழுந் எனத்தொடங்கும் தேவாரம்