சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும் யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சா தருவரை போன்ற வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து தாழுங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.சூழு எனத்தொடங்கும் தேவாரம்