சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர் ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.