என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் இல்லம் புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே அன்பனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.