என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக் கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.