என்னையொப் பாருன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னை நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.