என்ன
தேவாரம்என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் புஜவனுர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.
என்ன எனத்தொடங்கும் தேவாரம்