எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன் பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.