எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே.