எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப் பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத் தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும் அந்தளிர் ஆகம் போலும் வடிவர்ஆ ரூர னாரே.