எந்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் அந்தண் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை மந்தம் முழவுங் குழலு மியம்பும் வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.எந்தம் எனத்தொடங்கும் தேவாரம்