எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர் வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால் அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன் சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.