எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகுசெய்தாய் முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத் தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.