எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர் முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித் தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.